மதுரையில் ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி, 15 பேர் காயம்

By Pavi Jan 25, 2026 05:39 AM GMT
Report

மதுரையில் ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 

மதுரை விபத்து

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயமடைந்தனர்.

பள்ளப்பட்டி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து மீது, அதே வழியாக வந்த மற்றொரு ஆம்னி பேருந்து மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

மதுரையில் ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி, 15 பேர் காயம் | Omni Bus Collides With Truck In Madurai

இதில் பேருந்தில் பயணம் செய்த கனகரஞ்சிதம், சுதர்சன் மற்றும் திவ்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த 15 பேர் மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. சிவக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி, 15 பேர் காயம் | Omni Bus Collides With Truck In Madurai