வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் 4வது முறையாக விலை குறைப்பு

By Irumporai Aug 01, 2022 03:20 AM GMT
Report

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது.

சிலிண்டர்

சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் 4வது முறையாக விலை குறைப்பு | Ommercial Cylinder Price Reduce Today

சிலிண்டர் விலை குறிப்பு

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது.

இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டர் 2,141 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த மே 19ம் தேதிக்கு பின்னர் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 4வது குறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.