ஒரு லட்சத்தினை தாண்டிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு: உலக நாடுகள் பெரும் அதிர்ச்சி

omigron-virus
By Nandhini Dec 26, 2021 08:55 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் பேரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்தி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் வெவ்வேறு வேரியண்ட் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் சமீப காலத்தில் பாதிப்புகள் மெல்ல குறைந்தன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. முக்கியமாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது.

இதனால் இந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மற்ற நாடுகளிலும் தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

நேற்று ஒருநாளில் மட்டும் இங்கிலாந்தில் ஒமிக்ரானால் 23,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 1,14,625 ஆக உயர்ந்துள்ளது. இது உலக நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.