ஒமைக்ரான் மட்டுமல்ல புதிய உருமாறிய வகை வரும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வரும் நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வந்த டெல்டா வகையால் இந்தியாவில் 2வது அலை உருவாகி பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் டெல்டா பிளஸ் வகை வந்தபோதிலும்பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் ஒமைக்ரான் என்ற புதிய உருமாறிய வகையானது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பின்பு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. முழு அளவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் இந்த ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை என்பதால் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியது.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று இத்துடன் முடிந்து விடாது. உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஒமைக்ரானது உலகம் முழுவதும் மிக தீவிரமுடன் பரவிவருகிறது என அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப குழு தலைவரான மரியா வான் கெர்கோவ் ஜெனீவா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.