ஒமைக்ரான் இந்தியாவில் நுழைந்திருக்கலாம் மருத்துவர் பரபரப்பு தகவல்

India Virus Entry Omicron ON
By Thahir Nov 30, 2021 07:45 AM GMT
Report

தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் பல அடுக்கு உருமாறிய ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய வகை கொரோனா பற்றிய செய்திகள் நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,

ஒமைக்ரான் ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் ககன்தீப் காங் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தற்போது நமது முழு பார்வையும், ஒமைக்ரான் தீநுண்மியின் மரபணு வரிசைமுறையை கண்டறியும் முறையை அதிகரித்து, அந்த எஸ்-ஜெனி பிசிஆர் முறையைக் கொண்டு விரைவாக ஒமைக்ரானைக் கண்டறிந்து,

அது பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் புகழ்பெற்ற மைக்ரோபயாலஜிஸ்ட் மற்றும் நுண்ணுயிரியல் துறை மருத்துவர் ககன்தீப் காங்.

இது குறித்து டாக்டர் ககன்தீப் காங் கூறுகையில், இந்த ஒமைக்ரான் எனப்படும் புதிய வகை வைரஸ் ஏற்கனவே 12க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கூட அது ஏற்கனவே நுழைந்திருக்கக் கூடும். ஆனால், நம்மிடமிருக்கும் கொரோனா தீநுண்மியின் மரபணு வரிசைமுறை மிகவும் குறைவு. அதனால், இங்கே ஒமைக்ரான் பரவியிருந்தாலும் கண்டறிவது கடினம்.

ஆனால், புதிய கரோனா வைரஸ் உருவாகி ஒரு மாதத்துக்குப் பிறகு, அதன் மரபணு வரிசை முறை கிடைத்தும் எந்த பயனும் இருக்காது.

அது பிறகு வெறும் ஆராய்ச்சிக்கான பயன்பாட்டுக்கு மட்டுமே உதவும். இதன் மூலம், இந்திய மக்கள் தொகையில் புதிய ஒமைக்ரான் பரவுவதைக் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நல்ல வேளையாக தற்போது விரைவாக மரபணு வரிசைமுறையைக் கண்டறியும் முறை வந்துவிட்டது.

எனவே, இந்த முறை விரைவில் நமக்கு நல்ல பதில் கிடைக்கும் என்கிறார். இந்த புதிய வகை கொரோனா எஸ் - ஜெனி விடுபட்டது என்று கூறலாம்.

அதாவது, இதற்கு எஸ்-ஜெனி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டால், மரபணு வரிசைமுறை அதிகம் தேவைப்படாது. எனவே, ஒமைக்ரான் வகை வைரஸ் இருந்தால், ஒரு சில மணி நேரங்களிலேயே அதனைக் கண்டறிந்துவிடலாம்.

எஸ்-ஜெனி பிசிஆர் கருவி விரைவாகக் கிடைத்துவிட்டால், அதன் மூலம், விரைவாக கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ளலாம், உடனடியாக கொரோனா பரவுவதைக் கண்டறியலாம் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இது பல அடுக்கு உருமாற்றம் (30க்கும் மேற்பட்ட) பெற்ற, இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விடவும் அதிக உருமாற்றம் பெற்றதாக இருக்கிறது.

அதன் பரவும் தன்மை குறித்து நாம் புரிந்து கொள்ளவே ஒரு வார காலம் ஆகும் என்றும் மருத்துவர் கூறுகிறார். ஒரு வேளை, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் இந்த கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டால், இந்த வைரஸ் நோய் எதிர்ப்பாற்றலை தாண்டும் சக்தி பெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தென்னாப்ரிக்காவை எடுத்துக் கொண்டால் அங்கு வெறும் கால்பங்கு மக்கள்தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், இஸ்ரேலிலிருந்து வரும் தகவல், கொரோனா தடுப்பூசி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களைக் கூட ஒமைக்ரான் தாக்கியிருப்பது என்பதுதான் கவலை தருவதாக உள்ளது என்கிறார்.

ஆனால், இந்த ஒமைக்ரான் பற்றி கவலைப்படத் தேவையில்லை, இந்த நோய் எப்படி செயல்படுகிறது, சிகிச்சைகள் பலனளிக்கும் விதம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் மற்றும் தென்னாப்ரிக்காவைப் போல அல்லது இதர நாடுகளைப் போல இருக்குமா என்பது தெரியவரவேண்டும்.

இங்கே கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம், அதிக மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில், பரவும் தன்மை அதிகம். எனவே, உடனடியாக அதனை கண்காணிக்க வேண்டியதுதான் மிகவும் முக்கியமான விஷயம். அதே வேளையில், எந்த நாடும் பயணத் தடையை விதிக்கக் கூடாது.

இதனால், வைரஸ் நாட்டுக்குள் பரவுவது தாமதமாகும் அவ்வளவே. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், இதுபோன்ற வைரஸ், எந்த அறிகுறியும் இல்லாத தனிநபர்கள் மூலமாகவே பரவும். இதுபோன்ற எந்த உருமாற்றம் அடைந்த வைரஸிலிருந்தும் நாம் ஒருபோதும் தப்பிக்க முடியாது, ஒரு வேளை, உலகம் முழுவதும் பொதுமுடக்கம்ட அறிவித்தால் ஒழிய.

ஆனால், நாம் அதைச் செய்யக் கூடாது என்கிறார் அவர். ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுதான் நமது நோக்கம் என்றால், அதற்கு துரிதமாகச் செயல்படுவதுதான் அவசியம்.

சுகாதாரத் துறையை மேம்படுத்துவது நோக்கம் என்றால், ஒமைக்ரான் பரவிய நாடுகளில், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பான ஆய்வுகளை உடனடியாக நாம் பெறவேண்டும், அதற்கு ஏற்ப தயாராக வேண்டும்.

நாம் எந்த இலக்கை குறிவைக்கிறோமோ அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒரு வேளை, நாட்டுக்குள் ஒமிக்ரான் பரவுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தால், ஒரு வேளை, அது ஏற்கனவே நாட்டுக்குள் நுழைந்திருக்கக் கூடும்.

ஆனால், அதுதான் இலக்கு என்று வைத்துவிட்டால், பரிசோதனை விரைவுபடுத்துங்கள், வெளிநாட்டிலிருந்து வரும் ஒவ்வொருவருக்கும் இரண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். ஒன்று அவர் வந்தவுடன், இரண்டாவது 5 நாள்களுக்குப் பிறகு என்று முடிவு செய்ய வேண்டும் என்கிறார்.