''தடுப்பூசி போடாதவர்கள் மரணத்தை கூட சந்திக்கலாம்'' - ஜோ பைடன் எச்சரிக்கை
தடுப்பூசி போடாதவர்கள் மரணத்தை கூட சந்திக்கலாம் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், "தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது. இது அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவத்தொடங்கும். தடுப்பூசி போடாதவர்கள் மரணத்தை கூட சந்திக்கலாம்.
ஆகவே, மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே நமக்கு உண்மையான பாதுகாப்பு என கூறினார்.

மேலும், பொதுமக்கள் தடுப்பூசியின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். முழுமையான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்" என்று ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில், தற்போதைய நிலவரங்களின் படி உலகில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா உள்ளது. தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 1,150 கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.