உலகையே மிரட்டும் தென் ஆப்பிரிக்கா திரிபுக்கு ”ஓமிக்ரான்” என பெயர்

omicron corona variant
By Fathima Nov 27, 2021 06:03 AM GMT
Report

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட மிக ஆபத்தான கொரோனா திரிபுக்கு ஓமிக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகளை விட மிக ஆபத்தானதாக தென் ஆப்பிரிக்கா திரிபு வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த புதிய திரிபு, மிக அதிகமாகவும் வேகமாகவும் பன்மடங்காக பெருகும், பிறழ்வும் தன்மையோடு இருப்பதாக இதை கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு உலக சுகாதார நிறுவனம் ஓமிக்ரான் என பெயரிட்டுள்ளனர், கிரேக்கத்தில் ‘ஒமிக்ரான்’ என்றால் ‘சிறிய’ என்று அர்த்தமாம்.

இதற்கு முன்னதாக இந்த புதிய கொரோனா திரிபு, ‘பி.1.1.529’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இது டெல்டா திரிபை போல உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பது, வரும்நாள்களில்தான் தெரியவரும்.