மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு

night curfew up Omicron
By Thahir Dec 24, 2021 07:09 AM GMT
Report

ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2-ந்தேதி முதலில் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

அந்த வகையில்,மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை நாளை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது. மேலும்,திருமண விழாவில் 200 பேருக்கு மேல் பங்கேற்க தடை,ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,ஒமைக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதித்து உத்தரபிரதேச மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.