ஓமைக்ரானை தொடர்ந்து மிரட்டும் டெல்மைக்ரான் - மஹாராஷ்டிரா மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்
ஓமைக்ரான் வைரஸை அடுத்து, டெல்மைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக மஹாராஷ்டிரா மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய டெல்டா வகை வைரஸ் ஓமைக்ரான் உலக நாடுகளில் அதிபயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்தும் மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில கொரோனா சிறப்பு குழுவை சேர்ந்த மருத்துவர் ஷசாங் ஜோஷி ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது -
டெல்மைக்ரான் என்பது டெல்டா மற்றும் ஓமைக்ரான் அமைப்புகளின் கூட்டு சேர்க்கையாகும்.
டெல்மைக்ரான் வகை வைரஸானது, ஓமைக்ரான் வைரஸை காட்டிலும் அதிதீவிரமாக பரவக்கூடியது. ஆனால், இந்த வகையான வைரஸ் குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். டெல்டா மற்றும் ஓமைக்ரானின் கூட்டு சேர்க்கையான டெல்மைக்ரான் 2 வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.