சுனாமி வேகத்தில் டெல்டா, ஒமைக்ரான் பரவுகிறது - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

OmicronVariant MaSubramanian DeltaVariant
By Irumporai Jan 06, 2022 12:56 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது ஆகவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது தமிழக அரசு. அதே சமயம் தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் சுனாமி வேகத்தில் டெல்டா, ஒமைக்ரான் பரவுவதாக கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் டெல்டா, ஒமிக்ரான் இணைந்தே பரவி வருவதாகவும் , தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்கள் பெரும்பாலும்ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.