தேவைப்பட்டால் மாநில அரசு ஊரடங்கு விதிக்கலாம் : மத்திய அரசு கடிதம்

india lockdown omicron
By Irumporai Dec 27, 2021 10:17 AM GMT
Report

பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை தடுக்க உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்” என அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாகடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் : 

 தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மாநில அரசுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த விதிகளை மீறுவோர் மீது சட்ட ரீதியாகவும் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்படும் நிலையில்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கலாம். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உறுதிப்படுத்த வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, வியட்நாம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

ஆகவே , ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.