எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

COVID-19
By Irumporai Apr 27, 2023 11:28 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

எலிகள் மூலம் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 ஒமைக்ரான் கொரோனா

கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

 எலிகள் மூலம் ஒமைக்ரான்

அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை. இதனால் அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது. எலி மூலம் கொரோனா பரவியதா என அப்போது பெரும் கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன.

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் | Omicron Mutated Corona Cmc Transmitted

இதில் எலிகளுக்கு டெல்டா ஒமைக்ரான் வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் எலிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதில் எலிகளிடமிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தோன்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்கள் விலங்கிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆராய்ச்சி காட்டுகிறது.