பாஸ் நீங்க நினைக்கிற மாதிரி ஒமைக்ரான் லேசானது இல்ல : அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு
ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மருத்துவ மேலாண்மைக்கான முன்னணி அதிகாரி ஜேனட் டயஸ், ஒமைக்ரான் பாதிப்பு சாதாரணமாக எண்ண வேண்டாம் எனக் கூறியுள்ளார்
ஒமைக்ரான் பரவல் குறித்து விளக்கம் கொடுத்துள்ள அவர் ஒமைக்ரான் பாதிப்பு குறைவானதாக இருக்கலாம், ஆனால் லேசானதாக இல்லை. நவம்பரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைந்தது என ஆய்வுகள் தெரிவித்தன.
அதே சமயம் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் முதியவர்களிடம் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் இதுவரை ஆய்வு செய்யப்பட்ட பெரும்பாலான சோதனை முடிவுகள் இளம் வயதினரிடம் இருந்து எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது.
டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமைக்ரானின் பாதிப்பு குறைவானதாக தோன்றினாலும், தடுப்பூசி போடப்பட்டவர்களையும் இது பாதித்துள்ளது. ஆகவே , ஒமைக்ரான் லேசானது என வகைப்படுத்த முடியாது.
கொரோனா, டெல்டா வைகை வைரஸ்கள் ஏற்படுத்திய மாறுபாடுகளைப் போலவே ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிக்சை பெறுவோரும் உயிரிக்கின்றனர்.
தற்போதைய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக மக்கள்தொகையில் 70 சதவீதம் பேருக்கு ஜூலை மாதத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் . இதன் மூலம் தொற்றுநோயின் கடுமையான கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரலாம் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தினால் உயிர்ழப்பு குறையும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர், 2 வது டோஸ் தடுப்பூசியுடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிரிழக்கு விகிதம் 90% குறையுமென அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.