‘’ ஒமைக்ரான் சாதாரண ஜலதோஷம் இல்லை ‘’ - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் எச்சரிக்கை!

covid19 india vkpaul omicron warningcorona
By Irumporai Jan 13, 2022 06:49 AM GMT
Report

ஒமைக்ரான் பரவலை  மக்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, அதோடு ஒமைக்ரான் பரவலும் அதிகமாகிவருகிறது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்

 "மகாராஷ்டிரா ,மேற்கு வங்காளம் ,டெல்லி ,தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம் ,கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு 1.1 சதவீதமாக இருந்த நிலையில் நேற்று 11.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.

‘’ ஒமைக்ரான் சாதாரண ஜலதோஷம் இல்லை ‘’ - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் எச்சரிக்கை! | Omicron Is Not Common Cold Vk Paul Warns

இதனால் ஒமிக்ரான் தொற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று கூறியுள்ளார்

அதேபோல் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, ஒமைக்ரான் வைரஸ் சாதாரண ஜலதோஷம் அல்ல . இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போடவேண்டும் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி என்பது மிக முக்கிய தூணாக உள்ளது என்றார்.