டெல்டாவை விட மோசமானதா ஒமைக்ரான்? - ஆய்வுகள் சொல்வது என்ன

india delta southafrica threat omicron
By Thahir Dec 02, 2021 12:07 PM GMT
Report

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா ஒமைக்ரான் வைரஸ் பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக ஆய்வாளர்கள் தெறிவிக்கின்றனர்.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் விஞ்ஞானிகள் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் ஒமைக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் சில நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கக்கூடிய திறன் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெறிவிக்கின்றது.

அதே சமயம் தற்போதுள்ள தடுப்பூசிகள் கடுமையான நோய் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இந்த ஒமைக்ரான் வைரஸானது டெல்டா கொரோனா வகையை விட மோசமானதாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மேலும் தற்போதைய தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளன.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறும்போது,  “ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பில் லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன.

ஆனால், அந்த வைரஸ் லேசான அறிகுறியை ஏற்படுத்தும் என்று இப்போதே சொல்ல முடியாது.

இந்த பாதிப்புகள் பெரும்பாலும் இளம் வயதினரிடையே பரவி இருப்பதால் அறிகுறிகள் லேசானவையாக இருந்தது.

ஆனால் தற்போது வயதானவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது’ என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.