அச்சுறுத்தும் ஒமைக்ரான் : மராட்டியத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று!

Maharashtra Omicron Omicronindia
By Irumporai Dec 05, 2021 01:47 PM GMT
Report

உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் கொரோனாவை கவலையளிக்கக் கூடிய வைரஸாக வகைப்படுத்தியுள்ளது. அபாயகரமான டெல்டா கொரோனாவை விட 5 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என்று கூறியுள்ளது.

இதனால் பல்வேறு உலக நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளன. ஆனால் இந்தளவுக்கெல்லாம் ஒமைக்ரான் வொர்த்தே இல்லை என அதனை முதன்முதலாக கண்டறிந்த தென்னாப்பிரிக்க மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி கூறினார்

இந்த நிலையில் இந்தியாவில் 10 க்கும் குறைவாகவே இருந்த ஒமைக்ரான் தொற்று தற்போது அதிகரித்துள்ளது, இந்த நிலையில் மஹாராஷ்ட்ராவில் மேலும் 7 பேருக்கு  ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.