தமிழகத்திற்கு அருகில் "அபாய" ஒமைக்ரான் - இந்தியாவில் முதன்முறையாக இருவருக்கு பாதிப்பு

india corona omicron
By Irumporai Dec 02, 2021 01:32 PM GMT
Report

கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது! இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா பரவல் (Variant) கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான்’ (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும்  புதிய மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு உறுதியானது ஓமமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று என்பதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது

இதில் இருவருமே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இதில் ஒருவருக்கு 65 வயது, மற்றொருவருக்கு 45 வயது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இருவருடன் யார் யாரெல்லாம் நெருங்கிய தொடர்பில் இருந்தார்களோ அத்தனை பேரையும் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் லேசான பாதிப்புகளே இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு.

அனைவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளான தனிமனித விலகல், மாஸ்க் அணிவதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.