கேரளாவில் முதல் ஒமைக்ரான் தொற்று பதிவு - கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
டெல்டா வகை கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கொரோனா வகை உலக நாடுகளில் பரவி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் கர்னாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்பட சில மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் முதல் ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்,
“கேரளாவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதியானதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரின் மனைவி மற்றும் தாய் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி; இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து வருகிறோம்” என தெறிவித்தார்.