செப்டம்பரில் அடுத்த அலை - மீண்டும் பரவும் புது வகை கொரோனா - நிபுணர்கள் எச்சரிக்கை
ஓமைக்ரான் வகை கொரோனாவில் இருந்து பிரிந்த புது வகை வைரஸ் ஒன்று தற்போது இங்கிலாந்து நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில், இது மக்களிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸினால் உலகம் எதிர்கொண்ட இன்னல்களையும், சோதனைகளையும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கோடிக்கணக்கில் உலகமெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் முடக்கி போட்டது கொரோனா.
அதிலிருந்து மீண்டு தற்போது தான் உலகம் புத்துயிர் பெற்று இயங்கி வரும் நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து பிரிந்த ஓமைக்ரானின் அடுத்த variant பரவ துவங்கியுள்ளது.
ERIS வைரஸ்
ஓமைக்ரான் தொற்றிலிருந்து திரிந்து தற்போது உருவாகியுள்ளது Eris அல்லது EG.5.1 என்ற வைரஸ். இந்த வைரஸ் தான் தற்போது அதிகளவில் இங்கிலாந்த் நாட்டில் பரவி வருகின்றது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 10'இல் ஒருவருக்கு இந்த எரிஸ் வகை கொரோனா தோற்று இருப்பது இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
இதன் அறிகுறிகளாக சளி, உடல் சோர்வு, தலைவலி,தொண்டை புண் மற்றும் தும்மல் ஆகிய அறிகுறிகள் இருக்கின்றது. இங்கிலாந்து நாட்டில் தற்போது வானிலை மோசமாக இருப்பதால் இந்த தோற்று வேகமெடுத்துள்ளது. இது பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயது முதிர்ந்தவர்களையே தாக்கி வருகின்றது.
எச்சரிக்கும் நிபுணர்கள்
இங்கிலாந்து நாட்டில் அடுத்த அலை வரும் செப்டெம்பரில் இருக்கக்கூடும் என அந்நாட்டு வல்லுநர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிஸ் (Eris), ஆர்க்ட்ரஸ் (Arcturus) மற்றும் ஒமிக்ரான் (Omicron) திரிபு வைரஸ்கள் இந்த முறை அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.