ஒமைக்ரான் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம் - எச்சரித்த புதிய ஆய்வு முடிவு
ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியகியுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் காற்றில் வேகமாக பரவக்கூடியது என்றாலும், டெல்டாவை விட வீரியம் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 18,849 குழந்தைகளிடம் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆய்வு மேற்கொண்டது.

இதில், ஒமைக்ரான் பாதிப்பிற்கு பிறகு, மூக்கு, தொண்டை மற்றும் குரல்வளை அடங்கிய மேல் சுவாசக்குழாயில் தொற்றுநோய் தீவிரமடைந்தது தெரியவந்துள்ளது.
இதனால், சாதாரணமாக ஏற்படும் மூக்கு அடைப்பு, வறண்ட இருமல், நெஞ்சுவலி உள்ளிட்டவற்றை விட கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் பாதிப்புகளால், குழந்தைகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், சுருங்கிய சுவாசக்குழாய் போன்ற காரணத்தால், குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.