மிரட்டும் இன்ஃப்ளுயன்ஸா: 2 பேர் பலி - தமிழகத்திலும் அதிகரிப்பு!

Cold Fever Tamil nadu Ma. Subramanian Virus
By Sumathi Mar 10, 2023 07:54 AM GMT
Report

வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் 1000 தடுப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு

சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்த மூகாம் மூலம் தமிழகத்தில் எத்தனை பேர் எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியவரும்.

மிரட்டும் இன்ஃப்ளுயன்ஸா: 2 பேர் பலி - தமிழகத்திலும் அதிகரிப்பு! | Omicron Corona Virus Is Increasing Tamilnadu

அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்ப்பாடுகள் செய்யப்படுள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா தற்போது 20 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது. சமூக பரவல் ஆவதற்கு முன்பே இதனை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

 2 பேர் பலி

ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது நல்லது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாலே இன்ஃப்ளுயன்ஸா தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியாவில் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு அரியானா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.