பிரபல தமிழ் பட இயக்குனருக்கு ஓமிக்ரோன் தொற்று - ரசிகர்கள் அதிர்ச்சி
கொரோனா வைரஸ் ஒரு பக்கம் வேகமாக பரவி வரும் நிலையில், உலக முழுக்க ஓமிக்ரோன் வைரஸுன் தாக்கமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழ் பட இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இப்போது ஷாட் புட் 3 என்ற குழந்தைகளுக்கான படத்தை இயக்கி வருகிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஓமிக்ரோன் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அருண் வைத்தியநாதன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனது வீட்டுக்கு புது விருந்தாளி வந்திருக்கிறார். அவரது பெயர் ஒமிக்ரான். கவனமாக இருக்க வேண்டும் நண்பர்களே. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.