ஜெட் வேகத்தில் இந்தியாவில் உயரும் ஒமைக்ரான் தொற்று - சுகாதாரத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,071 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,41,986 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தொற்று எண்ணிக்கை 1,17,100 ஆக பதிவான நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவொருபுறமிருக்க இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
India reports 1,41,986 fresh COVID cases, 40,895 recoveries, and 285 deaths in the last 24 hours
— ANI (@ANI) January 8, 2022
Daily positivity rate: 9.28%
Active cases: 4,72,169
Total recoveries: 3,44,12,740
Death toll: 4,83,463
Total vaccination: 150.06 crore doses pic.twitter.com/ptYMOqdegy
இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 3,071ஆக உயர்ந்துள்ளது நேற்று தொற்று எண்ணிக்கை 3007 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது