‘‘ஒமைக்ரான் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு..” : மக்களுக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

dmk cmstalin omicron
By Irumporai Dec 24, 2021 02:08 PM GMT
Report

 ஒமைக்ரான் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாகவும், இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து கடை, வணிக வளாகம், திரையரங்குகள் வழங்கிய நடைமுறை கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும் அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்