அச்சுறுத்தும் ஒமைக்ரான் - தலைமை செயலர் இன்று ஆலோசனை

discuss omicran virus irayanbu
By Anupriyamkumaresan Nov 29, 2021 04:31 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக முறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு 'ஒமைக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கொரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு, இன்று (திங்கட்கிழமை) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.