“டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான்” - நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 97-ஆக உயர்வு

india delhi omicron cases new 10 cases
By Swetha Subash Dec 17, 2021 07:22 AM GMT
Report

டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் தொற்று மிக விரைவில் பிற நாடுகளுக்கு பரவ தொடங்கி தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.

இந்நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்பு ஏறுமுகாமவே இருக்கிறது.

நேற்று வரை 10-ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

இதுவரை இந்தியாவில் 87 பேருக்கு ஒமிரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்படுள்ளதால் அங்கு ஒமைக்ரான் பாதிப்பு 20ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது.