ஏமன் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 145 பேர் பலி

Killed Oman Houthi Rebels
By Thahir Nov 06, 2021 01:00 PM GMT
Report

ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24மணி நேரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 145 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் அல்-ஜாப்வா மற்றும் அல்-கசாரா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய போது ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 145 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர்கள் பயன்படுத்திய 18 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டதாகவும் கூட்டுப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து கூட்டுப்படையினர் தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 1000 பேர் வரை பலியாகியிருக்கிறார்கள்.

முன்னதாக கடந்த அக்.27 அன்று ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 85 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.