விண்வெளியில் ஒலிம்பிக் விளையாட முயற்சி செய்த வீரர்கள்...!

NASA tokyoolympics2020 spaceolympics
By Petchi Avudaiappan Aug 08, 2021 02:00 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பந்தை வைத்து வீரர்கள் விளையாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 32வது ஒலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியைப் பாராட்டும் வகையில் நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் விண்வெளியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றால் எவ்வாறு இருக்கும் என்று ட்வீட் செய்து, விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசை இன்றி விளையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஒரு பின்க்பாங் பாலை கையில் தொடாமல் இரு அணிகளும் விளையாடவேண்டும். இது எப்படி சாத்தியம் என நினைக்கிறீர்களா?. இரண்டு அணி வீரர்களும் வாயில் காற்றை நிரப்பி ஊதி பந்தை நகர்த்த வேண்டும். விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இங்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளை 19 நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் நடத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் டிராகன் விண்வெளி ஓடம் மூலமாக ஏழு விண்வெளி வீரர்கள் ஆறுமாத விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்வெளிக்குச் சென்றனர்.இவர்கள் விண்வெளியில் நடத்திய இந்த விளையாட்டான விளையாட்டுப் போட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.