சிக்கலில் சீன வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

gold olympi IND Mirabai Chan
By Irumporai Jul 26, 2021 09:29 AM GMT
Report

ஒலிம்பிக் பளு தூக்குதலில் இந்தியா சார்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளநடந்து வருகிறது. இந்த நிலையில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

சிக்கலில் சீன வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா? | Olympic Mirabai Chan Get Gold

ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ள நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தபட உள்ளது.

ஒருவேளை அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானால் இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.