ஒலிம்பிக் : இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தோல்வி வெண்கலம் வெல்ல வாய்ப்பு !

Belgium Indian men hockey semifinal
By Irumporai Aug 03, 2021 04:23 AM GMT
Report

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஹாக்கிப் பிரிவில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்தது. 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லாமல் சென்றுவரும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளியை கைப்பற்றும் என எதிர்பாரக்கப்பட்ட நிலையில்  தோல்வியை தழுவியது.

இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

அதன்பின்னர் தற்போது 49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால், இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. போட்டி தொடங்கிய முதல் காலிறுதியில், 2-1 என இந்தியா லீட் எடுத்தது.

போட்டியின் முதல் சில நிமிடங்களிலேயே கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை பயன்படுத்தி இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். அடுத்த சில நிமிடங்களில், இந்தியாவுக்கு இரண்டாவது கோலை அடித்தார் மந்தீப். இதனால், முதல் பாதியின் முடிவில் இந்தியாவுக்கு முன்னிலை கிடைத்தது. போட்டியின் 17-வது நிமிடத்தில், பெல்ஜியம் அணிக்கு அடுத்தடுத்து கிடைத்த 3 பெனால்டி கார்னர்களையும் இந்திய அணி தடுத்தது.

ஆனால், மீண்டும் 19 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய பெல்ஜியம் அணி வீரர் அலெக்சாண்டர் ஹெண்ட்ரிக்ஸ், இரண்டாவது கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். போட்டி தொடக்கத்தில் முன்னிலை பெற்ற இந்திய அணி, அதன் பிறகு போட்டி சமனான நிலையில் இருந்து இரு அணிகளும் கோடி அடிப்பதில் முனைப்பாக இருந்தன.

போட்டி முழுவதும் பெனால்டி வாய்ப்புகளை பெற்று கொண்டே இருந்த பெல்ஜியம் அணி, போட்டியின் 49-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் கோல் அடித்தனர். கடைசி காலிறுதி ஆட்டத்தில் கடைசி 8 நிமிடங்கள் இருந்தபோது, 3-2 என பெல்ஜியம் லீக் எடுத்தது.

7.30 நிமிடங்கள் மீதம் இருந்த நிலையில், பெல்ஜியம் அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையும் கோலாக மாற்றினார் பெல்ஜியம் அணியின் அலெக்ஸ் ஹெண்ட்ரிக். போட்டியின் கடைசி நிமிடத்திலும் கோல் அடித்த பெல்ஜியம், 5-2 என முன்னிலை பெற்றது.

இந்த போட்டி முழுவதும் எதிரணிக்கு அதிக பெனால்டி வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது இந்திய அணி. அதில் பெரும்பாலன வாய்ப்புகளை கோல் அடிக்காமல் தடுத்திருந்தாலும், சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்ட பெல்ஜியம் அணி, கோல் அடித்து முன்னேறியது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. போட்டி முடிவில், 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனால் ஃபைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆட உள்ளது.