4வது பதக்கம் வென்றது இந்தியா!! ஆடவர் ஹாக்கி அணி வெற்றி! பதக்கம் வென்ற முதல் ஆடவர்!

olympic india win 4th medal
By Anupriyamkumaresan Aug 05, 2021 04:10 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் ஜெர்மனி அணியுடன் மோதிய இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஆக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆட்டத்தின் இறுதிவரை பரபரப்பாக சென்ற போட்டியில் ஜெர்மனியை தோற்கடித்து பதக்கம் வென்றது இந்தியா.

4வது பதக்கம் வென்றது இந்தியா!! ஆடவர் ஹாக்கி அணி வெற்றி! பதக்கம் வென்ற முதல் ஆடவர்! | Olympic India Win 4Th Medal Men Hockey Wins

41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது இந்திய ஆடவர் ஆக்கி அணி.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.