ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி - ஸ்பெயினை வீழ்த்தி அசத்திய இந்தியா!

out spain olympic hockey india win
By Anupriyamkumaresan Jul 27, 2021 05:43 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in மற்றவைகள்
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் தன்னுடைய 3-ஆவது ஆட்டத்தில் ஸ்பெயினை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இந்தியா அசத்தலாக வென்றது..

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி - ஸ்பெயினை வீழ்த்தி அசத்திய இந்தியா! | Olympic Hockey Spain Out India Win

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் அணிக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த ஒலிம்பிக்கின் முதல் போட்டியில் நெதர்லாந்தை வென்ற இந்தியா, தன்னுடைய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் ஸ்பெயினுடன் இன்று மூன்றாவது போட்டியை எதிர்கொண்டது இந்தியா. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த இந்திய அணி முதல் பாதியில் இரண்டு கோல்களை போட்டு அசத்தியது.

அதில் ஆட்டத்தின் 14-ஆவது நிமிடத்தில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் சிங் முதல் கோலை பதிவு செய்தார். பின்பு, 15 ஆவது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங் 2-ஆவது கோலை அடித்தார். அதன் பின்பு ஸ்பெயினின் கோல் போடும் முயற்சிகளை இந்திய வீரர்கள் தொடர்ந்து தடுத்த வந்தனர்.

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி - ஸ்பெயினை வீழ்த்தி அசத்திய இந்தியா! | Olympic Hockey Spain Out India Win

இதனையடுத்து ஆட்டத்தின் 2-ஆவது பாதியின் 51-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை சாதகமாக்கிய ருபிந்தர் சிங் 3-ஆவது கோலை அசத்தலாக பதிவு செய்தார்.

இரண்டாவது பாதி முழுவதும் ஸ்பெயினால் கோல் அடிக்க முடியாததால், இந்தியா 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.