ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் - ரசிகர்கள் சோகம்!!
quit
olympic
federer
By Anupriyamkumaresan
காயம் காரணமாக, ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.
20 கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை வென்றுள்ள சுவிட்சர்லாந்தை ரோஜர் ஃபெடரர் சமீபத்தில் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், கால் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முழங்கால் காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டுக்காக விளையாடாமல் போவது வருத்தமளிப்பதாக கூறியுள்ள ஃபெடரர், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சக நாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.