ஒலிம்பிக்கில் இந்தியா இன்று! என்ன நேரத்தில் என்ன விளையாட்டு?

india today olympic tokya
By Anupriyamkumaresan Jul 24, 2021 04:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் நேரம் விவரிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சுடுதல்

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள்: அபூர்வி சண்டிலா, இளவேனில். தகுதி சுற்று அதிகாலை 5 மணி, இறுதி சுற்று: காலை 7.15 மணி. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல்: சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா. தகுதி சுற்று காலை 9.30 மணி, இறுதி சுற்று: பகல் 12 மணி.

பேட்மிண்டன்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் லீக் சுற்றில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீன தைபேயின் யாங் லீ-சி லின் வாங் ஜோடியுடன் மோதல், காலை 8.50 மணி.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் சாய் பிரனீத், இஸ்ரேலின் மிஷா ஜில்பெர்மானுடன் பலப்பரீட்சை, பகல் 9.30 மணி.

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று! என்ன நேரத்தில் என்ன விளையாட்டு? | Olympic Competiton India Today

ஆக்கி

இந்தியா-நியூசிலாந்து (ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம்), காலை 6.30 மணி. இந்தியா-நெதர்லாந்து (பெண்கள் பிரிவு லீக் ஆட்டம்), மாலை 5.15 மணி.

வில்வித்தை

கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்று: பிரவின் ஜாதவ்-தீபிகா குமாரி ஜோடி பங்கேற்பு, காலை 6 மணி முதல்.

பளுதூக்குதல்

பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவு: மீராபாய் சானு. தகுதி சுற்று காலை 6.20 மணி, இறுதி சுற்று காலை 10.20 மணி.

ஜூடோ

பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு: சுஷிலா தேவி, ஹங்கேரியின் செர்னோ விக்கியுடன் மோதல், காலை 7.30 மணி முதல்.

டேபிள் டென்னிஸ்

கலப்பு இரட்டையர் பிரிவில் மனிகா பத்ரா-சரத்கமல்-சீன தைபேயின் லின் யன் ஜூ-செங்கு ஜிங்குவுடன் மோதல் (காலை 8.30 மணி), பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா-இங்கிலாந்தின் ஹோ டின் டின்னுடன் சந்திப்பு (பகல் 12.15 மணி), சுதிர்தா முகர்ஜி-சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுடன் மோதல் (பகல் 1 மணி).

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று! என்ன நேரத்தில் என்ன விளையாட்டு? | Olympic Competiton India Today

துடுப்பு படகு

ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவின் தகுதி சுற்றில் அர்ஜூன் லால் ஜாட்-அரவிந்த் சிங் பங்கேற்பு, காலை 7.50 மணி முதல்.

குத்துச்சண்டை

ஆண்களுக்கான தொடக்க சுற்றில் விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ)-ஜப்பானின் மென்சா ஒக்காஜாவா, மாலை 3.54 மணி.