தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு..!
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் சதுரங்க விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது என்றார். தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல தமிழக அரசு முயற்சியை முன்னெடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறையை ஊக்குவித்து வருகிறது என்றார். பன்னாட்டு போட்டிகளில் தமிழக வீரர்,வீராங்கனைகள் பதக்கங்கள் வெல்ல ஊக்கத் தொகை உள்ளிட்ட ஊக்குவிப்பு திட்டங்கள் தொடர்கிறது.
சென்னை அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
அதில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு என்றே பிரத்யேகமான பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும்.
சர்வதேச போட்டியான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற ஜுலை மாதம் இறுதி வாரத்தில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.