பாகிஸ்தான் ஆல்அவுட்: பந்தை அறுத்து..ஆளுக்கு பாதியாக எடுத்துக் கொண்ட வீரர்கள்
Robinson and Tongue split ball: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் பந்தை பிரித்துக்கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது.
லீட்ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் பந்தை பிரித்துக்கொண்டனர்.
ஓலி ராபின்ஸன், ஜோஷ் டங்
லீட்ஸின் ஹெட்டிங்லே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சில் 171 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக அப்துல்லா ஷாஃபிக் 61 ஓட்டங்களும், இமாம்-உல்-ஹக் 42 ஓட்டங்களும் எடுத்தனர். ஓலி ராபின்ஸன் (Ollie Robinson), ஜோஷ் டங் (Josh Tongue) தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இருவரும் ஒரு வித்தியாசமான சூழலை எதிர்கொண்டனர்.
பந்தை இரண்டாக அறுக்குமாறு
அதாவது, ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர், அப்போட்டியின் பந்தை நினைவுப் பரிசாக எடுத்துச் செல்லும் நீண்டகால மரபு பின்பற்றப்படுகிறது. இப்போட்டியில் இருவருமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஒரு தனித்துவமான தீர்வை மேற்கொண்டனர்.
மைதான பராமரிப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் பந்தை இரண்டாக அறுக்குமாறு வீரர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி ஆளுக்கு பாதி பந்தை அறுத்த பின் எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து ஓலி ராபின்ஸன் கூறுகையில், "நாங்கள் ஆட்டத்தை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, டங்கிடம் நாம் இதை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.
அவரும் அதை சொன்னார், நானும் அதை செய்யலாம் அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றேன். இது ஒரு வித்தியாசமான விடயம்; கிரிக்கெட் பந்தின் பாதியை வைத்துக்கொள்வது என்பது அடிக்கடி நடப்பதில்லை; அதனால் இது நாங்கள் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்" என தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan