ஆஷஸ் தொடரிலிருந்து என்னை நீக்கியது சரியான முடிவு - இங்கிலாந்து வீரர் வெளிப்படை
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸின் கடைசி இரண்டு போட்டிகளில் தன்னை நீக்கியது சரியான முடிவுதான் என இங்கிலாந்தின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.
ஆலி போப்
ஆஷஸ் 2025-26 தொடரை ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கண்ணகில் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து வீரர் ஆலி போப் சரியாக சோபிக்காததால், கடைசி இரண்டு போட்டிகளில் கழட்டிவிடப்பட்டார்.
இந்த நிலையில், ஆலி போப் 2022ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கவுண்டி அணிக்கு திரும்புகிறார்.
குளிர்கால ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து கவலைப்படவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது என்று கூறுகிறார்.
அதே சமயம், கடைசி 2 போட்டிகளில் தன்னை நீக்கியது சரியான முடிவுதான் என்று ஆலி போப் தற்போது தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி அமையவில்லை
மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கவலைப்படவில்லை என்பதுதான் தவறான எண்ணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் செய்ய விரும்பியதெல்லாம் ஆஷஸ் தொடரை வெல்வதுதான். இது நிச்சயமாக ஒரு நல்ல விடயமே இல்லை என்று நினைக்கிறேன்.
ஆனால், மக்கள் ஏன் அப்படி உணர்ந்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனை (ஆஷஸ்) ஒரு சாதாரண தொடராகவே கருதி, எங்களிடம் இருந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர நாங்கள் முயன்றோம்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நாங்கள் திட்டமிட்டபடி அமையவில்லை.
மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அணியாக திகழவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவுஸ்திரேலிய மண்ணில் எங்கள் ஆட்டத்திறன் அதற்கு இடமளிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆலி போப், ஒரு இரட்டை சதத்துடன் 3732 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
