கோலிக்கு ஸ்கெட்ச் போட்ட ராபின்சன்- வசமாக சிக்கியதின் பின்னணி
இந்திய அணி கேப்டன் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்வது மிக எளிது என இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டிரா செய்யும் முனைப்புடன் போராடிய இந்திய அணியை இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டு காலி செய்தனர். அந்த வகையில் 55 ரன்கள் விளாசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆலி ராபின்சன் பந்துவீச்சில் கேப்டன் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனிடையே இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆலி ராபின்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இங்கிலாந்துக்கான எனது முதல் வெற்றியில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது உண்மையில் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கோலி விக்கெட்டை வீழ்த்தியது குறித்து பேசிய ராபின்சன் அவரை ஆட்டமிழக்கச் செய்வது 4வது அல்லது 5வது ஸ்டம்புகளில் அவர் பேட்டின் எட்ஜ் பகுதியில் வாங்குவார் என்ற நம்பிக்கையுடன் வெளியே திரும்புவது போன்று பந்தை வீச வேண்டும்எளிதான திட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்படித்தான் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.