கொலையாளியை சுட்டு பிடித்த போலீசார்; யார் இந்த நரேஷ் - அதிகாலையிலேயே பரபரப்பு
கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளியை போலீஸார் சுட்டு பிடித்துள்ளனர்.
சிக்கிய கொலையாளி
சேலத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(68). இவர் விவசாய நிலத்தில் பலத்த காயத்துடன் காது, மூக்கு அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில், நரேஷ் குமார் என்பவர் மூதாட்டியை கொலை செய்தது உறுதியானது.
சுட்டு பிடித்த போலீஸ்
இந்நிலையில் சங்ககிரி அருகே மலை அடிவாரத்தில் குற்றவாளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நரேஷ் குமாரை பிடிக்கச் சென்றனர். அப்போது, நரேஷ் குமார் கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வக்குமாருக்கு காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். நரேஷ் குமார் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் தனியாக வீட்டில் இருக்கும் மூதாட்டிகளையும், ஆடு மாடு மேய்க்கும் வயதான பெண்களையும் குறிவைத்து கொள்ளை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.