250 கோடி சொத்துகளை அபகரிதவர்கள் மீது புகார் அளித்த மூதாட்டி
கோவை மாவட்ட ஆட்சியரிடம், 250 கோடி மதிப்புள்ள தங்களது சொத்துக்களை அபகரிப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்மனு அளித்த மூதாட்டி. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி இவருக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள், கோவை புளியங்குளம் பகுதியில் உள்ளன.
இதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக கடந்த 2018 ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது . இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் தனிநபர் மீண்டும் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் தேர்தல் நேரத்தில் இதுகுறித்து எந்த அரசு அதிகாரிகள் இடத்தில் புகார் அளித்தாலும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தங்களது நிலங்களை மீட்டு தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க மூதாட்டி வந்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின், புகார் மனுக்களை பெறுவதில்லை. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முறையிட வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மூதாட்டி தங்களது நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்டு தர வேண்டும், தேர்தல் நேரத்தில் எந்த அரசு அதிகாரிகளும் பொதுமக்களுக்காக பணியாற்றுவதில்லை இது வேதனையளிப்பதாக உள்ளது என மூதாட்டி தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.