பெண்களிடம் தவறாக பேசினாரா? யுஸ்வேந்திர சாஹல் செய்த செயல் - தீயாய் பரவும் தகவல்!
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் பெண்களை டேட்டிங்கிற்கு அழைத்த போஸ்டுகள் இனையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
யுஸ்வேந்திர சாஹல்
திரைத்துறையில் மட்டும் இன்றி கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வருவது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி இப்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படும் ஹாட் டாப்பிக்காக இருப்பது இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? இல்லையா என்பது தான்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் டிசம்பர் 2020ல் தனஸ்ரீ என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். . கடந்த சில தினங்களாக சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாகச் சமீப காலமாகச் செய்திகள் வெளியானது.
இதற்கு முக்கிய காரணம், தனஸ்ரீ வர்மா ஒரு யூடியூபர்.மேலும் நடனக்கலைஞராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைதள ஃபாலோவ்ர்ஸ் அதிகமாக உள்ளனர். இந்த நிலையில் சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா தங்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பின்பற்றுவதை நிறுத்திவிட்டனர்.
தவறாக பேசினாரா?
அதன் பிறகு இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீக்கி உள்ளனர்.இதனால் இந்திய கிக்கெட் வீரர் சாஹலுக்கு விவாகரத்தா? எனக் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். ஆனால் இதற்கு இருவரிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளி வரவில்லை.
இந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல் எக்ஸ் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பல பெண்களுடன் டேட்டிங்கிற்கு அழைத்த போஸ்டுகள் இடம்பெற்றிருந்தனர். பின்னர் டெலிட் செய்யப்பட்ட பழைய போஸ்டுகள் தற்பொழுது மீண்டும் டிரெண்டாகி வருகின்றன.