டாஸ்மாக்கிற்கு 7 அடி நீள பாம்புடன் வந்த முதியவர் - அலறி அடித்து ஓடிய குடிமகன்கள்
செங்கல்பட்டு மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் தனது தோளில் 7 அடி நீள பாம்பை சுற்றியபடி வந்ததால் மது வாங்க வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடிமகன்கள் அலறி அடித்து ஓட்டம்
செங்கல்பட்டு பரனுார் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். அநத பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் இன்று (18.05.2023) காலை மது வாங்க டாஸ்மாக் கடைக்கு சென்ற போது வழியில் சாலையில் ஊர்ந்து சென்ற சாரைப்பாம்பை பிடித்து தனது தோளில் போட்டுக் கொண்டு மது வாங்க டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.
அப்போது மற்றவர்களுடன் மது வாங்க வரிசையில் நின்றுள்ளார். தோளில் பாம்புடன் நிற்பதை பார்த்த குடிமகன்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதை தொடர்ந்து முதியவர் தோளில் பாம்பு நெளிவதை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். பின்னர் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
இதை தொடர்ந்து அந்த முதியவர் பாம்பை தனது லுங்கியில் போட்டுக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பாம்பை ஏரிக்கரையில் கொண்டு போய் விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan