போதையில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி வன்கொடுமை - தற்கொலைக்கு முயன்ற முதியவர்!
மதுபோதையில் முதியவர், மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
காஞ்சிபுரம், புதிய காலனியில் வசிப்பவர் வேங்கப்பன் (65). இவர் தனது உறவினர் இறப்பு நிழச்சிக்காக புலிவாய் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தனது உறவினர்களுடன் மது அருந்தியுள்ளார்.
அதில், அப்பகுதியை சேர்ந்த 14 வயது மனநலம் குன்றிய சிறுமி இருந்ததை பார்த்துள்ளார். அச்சிறுமியிடம் பேச்சு கொடுத்து தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
முதியவர் கொடூரம்
அப்போது சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு உறவினர்கள் வந்து பார்த்ததில் முதியவர் தப்பியோடியுள்ளார். அதனையடுத்து புகாரின் பேரில் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையில் இதை அறிந்த முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.