ரூ.2000 பந்தயத்திற்காக கழிவு நீரை பருகிய முதியவர்

Water Old Man Sewage Drank Bet RS 2000
By Thahir Jan 17, 2022 04:40 AM GMT
Report

கழிவு நீரை குடித்தால் ரூ.2000 தருவதாக கூறி முதியவர் ஒருவரை இளைஞர்கள் சிலர் கழிவு நீரை குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜாவதி கிராமத்தை சார்ந்த முதியவர் பன்னலால் ). இவர் கடந்த ஜன. 13 ஆம் தேதி குஷுவாஹா பகுதியில் சென்றுகொண்டு இருந்தார் அப்போது அவர் வெற்றிலையை எடுத்து சாப்பிட முயற்சிக்கும் போது அது கீழே விழுந்துள்ளது.

கீழே விழுந்த வெற்றிலை கழிவு நீரில் விழுந்த நிலையில், அதனை எடுத்து அருகே இருந்த கிணற்று நீரில் கழுவிய முதியவர் சாப்பிட்டுள்ளார்.

இதனைகவனித்த இளைஞர்கள் மற்றும் சிலர், கழிவு நீரில் விழுந்ததை ஏன் எடுத்து சாப்பிடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுவும் சாதாரண நீர் தானே? வீட்டில் உபயோகித்து போக மீதி கழிவு நீராக வருகிறது என கூற, அதனைக்கேட்ட இளைஞர்கள் சிலர் ரூ.2000 பந்தயம் கட்டுகிறோம் ,கழிவு நீரை குடிகிக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர்.

சற்றும் யோசனை செய்யாத முதியவர், ரூ.2000 ஆயிரம் வேண்டும் என்று கூறியவாறு கழிவு நீரை எடுத்து கைகளில் அள்ளி பருகினார்.

இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்யவே, அது வைரலாகி கண்டனத்தை பெற்று வருகிறது.