வாரிசு இல்லை.. சொத்துக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதியவர் - ராணிப்பேட்டையில் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பெரிய தெருவில் வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் வரதன் (75) மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மனைவி மற்றும் வாரிசுகள் இல்லாத நிலையில் வளர்ப்பு மகன் அல்லது உறவினர்கள் சொத்துக்காக கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்து தக்கோலம் பெரிய தெருவில் வசித்து வருபவர் வரதன். இவருக்கு திருமணமாகி வாரிசுகள் இல்லை கடந்த ஆண்டு இவரது மனைவி இறந்து விட்டார்.
இதனால் வரதன் தனியாக வசித்து வந்தார் வரதனுக்கு வீடு நிலம் என சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது. மேலும் வரதன் அப்பகுதியில் நில தரகராக செயல்பட்டு வந்துள்ளார்.
பெரிய தெருவில் தனியாக வசித்து வந்த வரதன் தினம்தோறும் அதிகாலையில் 5 மணி அளவில் வாசலுக்கு தண்ணீர் தெளித்து விட்டு சுத்தம் செய்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச்சுக் கொடுப்பது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை வரதன் வெளியில் வராததைக் கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகத்தின்பேரில் வீட்டின் கதவை தட்டியபோது எந்த பதிலும் வராத நிலையில் தக்கோலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்தபோது வரதன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது வரதன் அப்பகுதியில் நில தரகராக செயல்பட்டு வந்ததாகவும் அவருக்கென்று சொந்த வீடு மற்றும் கொஞ்சம் நிலம் இருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் வரதன் தன் அண்ணன் மகன் அன்புவை தன் சொந்த மகனாக பாவித்து அனைத்து உதவிகளும் செய்து வந்ததாகவும் அன்பு தன் வளர்ப்பு மகன் என பலரிடம் தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.
வரதனுக்கு வாரிசுகள் இல்லாததனால் அன்பை தன் சொந்த மகனைப் போல் பாவித்ததாலும் இதனைப் பயன்படுத்திய அன்பு கடந்த சில தினங்களாக வரதனிடம் தனக்கு சொத்தை பிரித்துத் தரும்படி அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் போலீசார் வரதன் வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் கருப்பு பை ஒன்று கைப்பற்றப்பட்டது இதை சோதனை செய்தபோது அதில் கத்தி கயிறு மற்றும் மயக்க மருந்துபோன்ற பொருட்கள் இருந்ததாக தெரிகிறது.
இதனால் ஏற்கனவே வரதனை கொலைசெய்வதற்கான திட்டம் திட்டி இருக்கலாம், அதற்காக முன்னேற்பாடாக இந்தப் பையில் கொலை செய்வதற்கான பொருட்களை வைத்து வைத்து இருக்கலாம்.
வீட்டில் எந்தப் பொருட்களும் திருடு போகாத்தால்
சொத்துக்கு ஆசைப்பட்டு வளர்ப்பு மகன் அல்லது உறவினர்கள் சொத்துக்காக அவரை கொலை செய்தார்களா அல்லது நிலத் தரகர் என்பதால் முன்விரோதம் காரணமாக வேறு யாராவது அவரை கொலை செய்தார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாகவும்
காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.