உயிரோடு மூதாட்டியை சுடுகாட்டில் வீசிய உறவினர்கள் - கதறிய பரிதாபம்!
மூதாட்டியை உயிரோடு சுடுகாட்டில் உறவினர்கள் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநல பாதிப்பு
நெல்லை, களக்காடு சிதம்பரபுரம் பகுதியிலுள்ள சுடுகாட்டில் மூதாட்டி ஒருவர் தனியாக கட்டிலில் அமர்ந்திருந்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்து அந்த வழியாகச் சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி தலைமையில் போலீஸார் சென்று விசாரிக்கையில்,
தன்னுடைய பெயர் இசக்கியம்மாள்(80). கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததையடுத்து, அதன் பின்னர் அவரின் மகன் கந்தசாமி பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். மகன் கந்தசாமி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததால், அதிர்ச்சியடைந்த மூதாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.
கைவிட்ட குடும்பம்
அப்போது, சேர்த்துவைத்திருந்த 40,000 ரூபாயையும், அவரிடமிருந்த தங்க மோதிரத்தையும் சிலர் ஏமாற்றிப் பறித்துச் சென்றிருக்கின்றனர். அதன்பின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனால் வீட்டிலேயே முடங்கிய அவரை, மகன் கந்தசாமியின் மனைவி, உறவினர்கள் லோடு ஆட்டோவில் கட்டிலுடன் ஏற்றி, சுடுகாட்டில் வீசிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து போலீஸார் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றதில் உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.