காவல்துறையினரிடம் நாடகமாடிய மூதாட்டி - இதுதான் காரணமா?
மதுரையில் 26 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்த மூதாட்டியை காவல்துறையினர் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணாநகர் எல்ஐசி காலனியை சேர்ந்த 80 வயது மூதாட்டி சரஸ்வதி என்பவர், மகன் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனிடையே மகனும், மருமகளும் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த 26 சவரன் நகையை எடுத்து தனது மகளுக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். இதை மறைக்க அடையாளம் தெரியாத நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், வறுமையில் வாடிய மகளுக்கு உதவுவதற்காகவே நகையை மூதாட்டி கொடுத்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து மூதாட்டியை எச்சரித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.