6 சவரன் நகைக்காக 60 வயது மூதாட்டி கொடூர கொலை - உடலில் மஞ்சள் தூவி சென்ற அரக்கர்கள்!
சென்னை காசிமேட்டில் 60 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியில் அந்தோணி மேரி - மைக்கல் நாயகம் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை கணவர் மைக்கல் நாயகம் மீன் பிடிக்க சென்ற நிலையில், அந்தோணி மேரி என்பவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பணி முடிந்து வீட்டிற்கு வந்த கணவர், மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்தோணி மேரி அணிந்திருந்த தாலி செயின், மோதிரம் உள்ளிட்ட 6 சவரன் நகை கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும்
மோப்ப நாய்கள் கண்டுபிடிக்காத வண்ணம் சடலம் முழுவதும் மஞ்சள் தூளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,
தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.