வாசலில் கோலம் போட்ட மூதாட்டி வெட்டி கொடூர கொலை! என்ன நடந்தது?
மேலூர் அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த மூதாட்டியை வெட்டி கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த நகைகளை பறித்து சென்ற மர்மகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலூரை சேர்ந்த துரைப்பாண்டி, முத்துக்கிளி தம்பதியினருக்கு 3 மகன்கள் மற்றும் 5 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து ஆங்காங்கே வசித்து வரும் நிலையில், வயதான இந்த தம்பதியினர் மட்டும் மேலூரில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார் மூதாட்டி முத்துக்கிளி. அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் அரிவாளால் முத்துக்கிளியை வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை எல்லாம் எடுத்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் துரைப்பாண்டி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு, மர்ம கும்பலை தீவிரமாக
தேடி வருகின்றனர்.