மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசிய தம்பதி! கடன் கொடுத்தது பாவமா?
டெல்லியில் கடன் கொடுத்த பாவத்துக்காக, 72 வயது மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசி சென்ற கணவன் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவரிடம், அவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆர்யா - தனு தம்பதியினர் தங்கள் கஷ்ட நிலைமையை கூறி ஒன்றரை லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
இரக்கப்பட்டு பணத்தை அளித்த மூதாட்டி நீண்ட நாட்களாக பொறுமையோடு காத்திருந்தார். அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டதால் அந்த தம்பதியினரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
இதனால் இரு தரப்புக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தம்பதியினர் மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி விடாமல் உதைத்துள்ளனர். இதில் அந்த மூதாட்டி துடிக்க துடிக்க மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கழற்றி கொண்டு, அவரை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசி சென்றுள்ளனர்.
இந்த நகைகளை அடகு வைத்து பணமாக வாங்கி சுதந்திரமாக
சுற்றி திரிந்துள்ளனர். மூதாட்டியின் பாகங்களை கைப்பற்றிய போலீசார், கொலையாளி தம்பதியினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.